Daily Archives: July 25, 2013

வாழ்க்கை

This is an incredible image. The sun looks like it is both in the sky and in the water forming two suns.

VIGIL KUMAR's avatarVIGIL KUMAR

sunset

அந்தி வேளையில்
குருதியில் தோய்த்த
அகண்ட ஆகாயத்தில்
ஒய்வு தேடி நான்
மேற்கு நோக்கி
பலாயனம் செய்கிறேன்
வழியெங்கும் விண்மீன்கள்
கைகொட்டி சிரிக்கின்றன
என் மறைவில் மட்டுமே
அவை ஜொலித்து பழகிவிட்டன
விடிவானில்
வெள்ளிக்கீற்றுகள்
மவுனமாய் விழுந்து உடைவதை
அவை அறிவதில்லை
தாலி அறுந்த
விதவை நட்சத்திரங்களின்
ஒப்பாரி என்னை தினமும்
துயில் எழுப்புகிறது
கிழக்கில் மீண்டும்
உதித்து எழுகிறேன்
இன்னொரு
பயணத்துக்காக…
– விஜில் குமார்

View original post